அரசியலமைப்பிற்கு ஏற்ப சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு செய்யப்படும் முறை!

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Jul 15, 2022 07:56 AM GMT
Report

சிறிலங்காவின் புதிய அதிபர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட உள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 38 வது ஷரத்தின் (1) துணை ஷரத்திற்கு அமைய அதிபர் பதவிக்கு வெற்றிடம் ஏற்படும் நேரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 40வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது போல், வெற்றிடமாக உள்ள அதிபரின் மீதமுள்ள பதவிக்காலத்திற்கு மாத்திரம் அந்த பதவியை வகிக்க தகுதியான நாடாளுமன்ற உறுப்பினர் அதிபராகத் தெரிவு செய்யப்படுவார்.

1981 இலக்கம் 2 அதிபரைத் தெரிவு செய்யும் ( சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின்படி அதிபர் தெரிவு செய்யப்படுவார். இந்த நடவடிக்கைகள் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்படும் என்பதுடன் வாக்கெடுப்பின் போது, சபாநாயகருக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிபரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றம் மூன்று நாட்கள் கூடும். அதிபர் பதவி வெற்றிடமாகிய நாளில் இருந்து கூடிய விரைவில் அதேபோல் அன்றைய தினத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு மேற்படாத வகையில் அதிபரைத் தெரிவு செய்ய வேண்டும்.

அதிபர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அப்போது நாடாளுமன்றத்தின் கூட்டம் மற்றும் உரிய தினம் மற்றும் நேரத்தை நாடாளுமன்ற செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பார்.

அவ்வாறு நாடாளுமன்றம் கூடும் போது, அதிபர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம், நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.

வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் முறை

அரசியலமைப்பிற்கு ஏற்ப சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு செய்யப்படும் முறை! | Sri Lanka President Election Parliament Ranil

நாடாளுமன்ற கூட்டம் ஆரம்பமான தினத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு குறையாது மற்றும் 7 நாட்களுக்கு பின்னர் ஒரு தினத்தில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் தினம் மற்றும் நேரத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தீர்மானிப்பார்.

வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் நாடாளுமன்றம் கூட வேண்டும். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்படுவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாம் எதிர்பார்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதிபர் பதவிக்கு பரிந்துரைத்து, அவர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டால், அதிபர் பதவியில் சேவையாற்ற அவர் விரும்புகிறார் என்பதற்கான எழுத்து மூலமான இணக்கத்தை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் வேட்பாளராக பரிந்துரைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். அத்துடன் அதிபர் பதவிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் மாத்திரம் பரிந்துரைக்கப்பட்டு, அது ஆமோதிக்கப்பட்டால், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அவரை அதிபராகத் தெரிவு செய்துள்ளதாக அறிவிக்க வேண்டும்.

வாக்கெடுப்பு நடைபெறும் முறை

அரசியலமைப்பிற்கு ஏற்ப சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு செய்யப்படும் முறை! | Sri Lanka President Election Parliament Ranil

அதிபர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்புக்கான திகதியையும் நேரத்தையும் நாடாளுமன்றம் அறிவிக்க வேண்டும்.

48 மணி நேரத்திற்குள் வேட்புமனுக்கள் பெறப்பட வேண்டும். இதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தும் தினத்தில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாக கடமையாற்றுவார் என்பதுடன் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் வெற்று வாக்கு பெட்டியை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காண்பிக்க வேண்டும்.

வாக்கு பெட்டிகள் முத்திரை இடப்பட்டு மூடப்பட வேண்டும். வாக்கெடுப்பு ஆரம்பித்த பின்னர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், வாக்களிப்பதற்காக சபாநாயகர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களை பெயர் கூறி அழைக்க வேண்டும்.

அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவத்தாட்சி அதிகாரியின் மேசைக்கு சென்று வாக்குச்சீட்டை பெற்று வாக்கை அளித்து, வாக்குச்சீட்டை வாக்கு பெட்டிக்குள் போட வேண்டும்.

வாக்குச்சீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் கவனமின்றி சேதப்படுத்தி இருந்தால், அதனை மீண்டும் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் திருப்பி கொடுக்க முடியும். அது குறித்து தெரிவத்தாட்சி அதிகரி திருப்தியடைந்தால், மற்றுமொரு வாக்குச்சீட்டை வழங்க முடியும். அது மாத்திரமின்றி பழுதடைந்த வாக்குச்சீட்டை தெரிவத்தாட்சி அதிகாரி தாமதமின்றி செல்லுப்படியற்றதாக்க வேண்டும்.

வாக்களிக்கும் முறை

அரசியலமைப்பிற்கு ஏற்ப சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு செய்யப்படும் முறை! | Sri Lanka President Election Parliament Ranil

வாக்களிக்க அழைக்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது இருந்தால், வாக்கெடுப்பு முடியும் முன்னர் இரண்டாவது முறையாக அழைக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்றால், அவர்கள் வாக்களிப்பை தவிர்த்ததாக கருதப்படும்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு வாக்கை மாத்திரமே அளிக்க முடியும். வாக்களிக்கும் வேட்பாளரின் பெயர் எதிரில் உள்ள சதுரத்திற்குள் “1” என்ற இலக்கத்தை எழுதி வாக்கை அளிக்க முடியும்.

பல வேட்பாளர்கள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் விருப்பு வாக்குகளை அளிக்கலாம். இதற்கு அமைய 2 மற்றும் 3 வது சதுரங்களுக்குள் வரிசைப்படி விருப்பு வாக்கை அளிக்க வேண்டும்.

வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் இடத்திற்கு வர வேட்பாளர் விரும்பினால், அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். தனது சார்பில் வேறு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அனுப்பி வைக்க முடியும்.

செல்லுப்படியான வாக்குகளில் இரண்டில் ஒன்று என்ற வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால், அந்த வேட்பாளர் அதிபராகத் தெரிவு செய்யப்படுவார்.

தெரிவத்தாட்சி அதிகாரியான நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அதனை தாமதமின்றி அறிவிப்பார். செல்லுப்படியான வாக்குகளில் எந்த வேட்பாளரும் இரண்டில் ஒன்று என்ற வாக்கு வீதத்தை பெறாவிட்டால், இரண்டாவது, மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ண நேரிடும்.

குறைந்த விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதுடன் இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்படும்.

எண்ணிக்கையின் போது செல்லுப்படியான வாக்குகளில் இரண்டில் ஒன்று என்ற வாக்குவீதத்தை எந்த வேட்பாளரும் பெறவில்லை என்றால், பெரும்பான்மை வாக்குகளை பெற்ற வேட்பாளர் அதிபராகத் தெரிவு செய்யப்படுவார்.

இரண்டு வேட்பாளர் அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் சமமான வாக்குகளை பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் அதிபராகத் தெரிவு செய்யப்படுவார். 

ReeCha
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021