குடும்பத்துடன் பௌத்த தேசத்தை விட்டு வெளியேறிய கோட்டாபய - தற்போது வெளியாகியுள்ள தகவல்!
இரண்டாம் இணைப்பு
நாட்டு மக்களால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தற்போது தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று காலை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திற்குச் சென்ற கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்று, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தோல்வியை ஏற்றுக் கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள இடம் தொடர்பில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இன்று காலை கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டாபயவின் வருகைக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதற்கமைய 30 நிமிடங்களுக்கு முன்னர் கோட்டாபய மற்றும் குடும்பத்துடனான ஹெலிகொப்டர்கள் இரத்மலானை விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளன.
தற்போது, கோட்டாபய இரத்மலானை விமானப்படைத் தளத்தில் இருப்பதுடன், அவரைச் சந்திப்பதற்காக முப்படைத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் இரத்மலானையிலிருந்து எங்கு செல்வார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகுவார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்