ரணிலின் உத்தரவுக்கமைய வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் சகல சேவைகள், பணிகள் அல்லது தொழில் பங்களிப்பு என்பனவும் அத்தியாசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முதல் நடைமுறை
எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம், கூட்டுறவுச் சங்கம் அல்லது வேறு எந்த அரச நிறுவனங்களாலும் வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சேவைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அதிபரால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் சிறிலங்கா அதிபர் இந்த பிரகடனத்தை வெளியிட்டதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா
