“நாம் எல்லோரும் பிரபாகரனின் மக்கள் தான்” உங்களால் முடிந்தால் என்னை சுடுங்கள் பார்ப்போம் - பகிரங்க சவால்விடுத்த மூதாட்டி!
“தமிழன் தமிழன் தான், நாம் எல்லாம் பிரபாகரனின் மக்கள் தான், உங்களால் முடிந்தால் என்னை சுடுங்கள் பார்ப்போம்” என யாழில் நடைபெற்ற போராட்டத்தின் போது தாயொருவர் காவல்துறையினர் மற்றும் படையினரை நோக்கி பகிரங்க சவால் விடுத்து பேசியுள்ளார்.
மேலும் இன்று தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் நாம் இந்த இடத்தில் நின்றிருக்கமாட்டோம், நாம் எல்லாம் எவ்வளவு செல்லப்பிள்ளைகளாக வாழ்ந்தோம் தெரியுமா எனவும் தெரிவித்து மிகவும் மனம் வருந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரணிலுக்கு எதிர்ப்பு
நேற்றைய தினம் தேசிய பொங்கல் விழாவிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழிற்கு வருகைதந்திருந்த போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தின் போதே தாயொருவர் காவல்துறையினரை நோக்கி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
குழப்பம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதன்போது காவல்துறையினரின் கரங்களைப் பிடித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சியும் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
