குழு ஒன்றின் தலைவராவதற்கு தகுதியற்றவர் ஞானசாரர்! ஆளும் தரப்பிற்குள்ளேயே எழுந்தது எதிர்ப்பு
ஞானசார தேரரை குழு ஒன்றின் தலைவராக நியமித்தமை முற்றிலும் முட்டாள்தனமான செயல் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குழு ஒன்றின் தலைவர் பதவிக்கு அவருக்கு தகுதியில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை(Galagoda Aththe Gnanasara Thero ), ஒரு நாடு ஒரு சட்டம் செயலணிக் குழுவின் தலைவராக நியமித்தமை முட்டாள்தனமான செயல் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dilan Perera) தெரிவித்துள்ளார்.
பதுளை எட்டம்பிட்டிய பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஞானசார தேரர் மீது தவறுகள் இருக்கலாம், சில உண்மைகளும் இருக்கலாம் இருப்பினும் அந்த தவறுகளுடன் அவர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டது பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.