சீனாவுக்கு பறக்கிறார் இலங்கை அதிபர் - இந்தியாவும் அழைப்பு..!
Ranil Wickremesinghe
China
India
By Kiruththikan
அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு செல்கின்ற நிலையில், சீனாவுக்கும் பயணம் மேற்கொள்ளும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒக்டோபர் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் சரியாக ஒரு வருடத்துக்கு பின்னர் இந்தியாவின் அழைப்பை ஏற்று அங்கு செல்கிறார்.
ஒரு வருடத்தின் பின்னரே வாய்ப்பு

முன்னதாக அவருக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், ஒரு வருடத்தின் பின்னரே அந்த வாய்ப்பு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கையில் நிலவும் இந்தியா - சீன போட்டியின் காரணமாக, இந்தியா அழைப்பு விடுத்ததன் பிரகாரம் சீனா தானும் அழைப்பு விடுத்திருக்கலாம் என சமூக மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 23 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி