இங்கிலாந்தின் முன்னாள் பிரதமருடன் தன்னை ஒப்பிட்டு ரணில் பெருமிதம்!

Dollar to Sri Lankan Rupee Ranil Wickremesinghe Prime minister Sri Lanka United Kingdom
By Kalaimathy May 14, 2022 06:51 AM GMT
Report

பணத்தை அச்சிடவில்லை என்றால் அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்த முடியாமல் போகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்திச் சேவைக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை என்றாலும் பணத்தை அச்சிட நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பணத்தை அச்சிடவில்லை என்றால், அரச ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாது. மிக உக்கிரமான பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

ஆங்கிலேயர்கள் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் கூட இவ்வாறான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கின்றேன்.

இந்த ஆண்டே எமக்கு மிகவும் கடினமான ஆண்டு. அந்நிய செலாவணி இல்லை. அரசாங்கத்திற்கு வருமானம் கிடையாது. அந்நிய செலாவணியுடன் வர்த்தகங்கள் நடக்கவில்லை என்றால், வருமானம் குறையும்.

ரூபாய் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணியுடன் வர்த்தகம் செய்யவில்லை என்றால், வரியை செலுத்த முடியாது.

வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும். அந்நிய செலாவணி நெருக்கடியால், ரூபாய் கிடைக்கும் வருமானம் கிடைப்பதில்லை.

தற்போதைய நிலைமையில் சுமார் மூன்று பில்லியன் டொலர்கள் வரை தேவைப்படுகிறது. இதனை பெற்றுக்கொள்வதே எமக்கு இருக்கும் முதலாவது சவால்.

அதனை பெற்றுக்கொள்ளவே நான் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றேன். நாட்டில் வரிசைகளை இல்லாமல் செய்ய வேண்டும். சாதாரண இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் மூன்று வேளையும் சாப்பிட வழியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நடுத்தர வகுப்பு மக்களை முன்னேற்ற வேண்டும். உழைக்கும் மக்களின் வீடுகளுக்கு சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

நாட்டில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் நிற்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 1977 ஆம் ஆண்டு நாங்கள் இப்படியான வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம்.

திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தினோம். மின்சாரம் இன்றி 2001 ஆம் ஆண்டு எமக்கு இருண்ட யுகமாக இருந்தது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

அவற்றையும் நான் முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை முன்நோக்கி இட்டுச் சென்றேன். 2015 ஆம் ஆண்டும் நாம் பெரும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டது.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக செய்தோம். ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். நான் பிரதமராக பதவியேற்ற காலங்களில் மூன்று வேளையும் மக்களுக்கு சாப்பிடும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தேன்.

சிறப்பாக வாழ வழியை உருவாக்கினேன். தொழில் வாய்ப்புகளை உருவாக்கினேன். தற்போது இந்த சவாலை ஏற்று மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்க நான் எதிர்பார்த்துள்ளேன்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இவற்றை செய்ய முடியும். இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலுக்கும்1939 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான்கு உறுப்பினர்களே இருந்தனர்.

எனினும் பிரதமராக பதவியேற்று போரையும் வென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016