தாக்குதலுக்கு உள்ளான காவல்துறைமா அதிபர் - சந்தேகநபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பலர் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மீது கடந்த ஆண்டு மே 10ம் திகதி அன்று தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கின் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக, தனியாக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள மொஹமட் றிஸ்வி இஸ்மத் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் உரிய முறையில் முன்னிலை ஆகாதமை தொடர்பிலான உண்மைகளை காவல்துறையினர் நீதிமன்றில் முன்வைத்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட 25 சந்தேகநபர்களும் இன்று திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
