மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த ஆண்டு, முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்றைய தினம் (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
சட்டச் சிக்கல்கள்
தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம் மற்றும் 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம்.
அடுத்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம்.
அரசியலமைப்பு
சட்டத் தடைகள் உள்ளன, அவற்றை அகற்ற முயற்சிப்பதுடன் அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது.
அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை என்ற அடிப்படையில் அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு.
மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
