வழமை போன்று இயங்கும் யாழ்ப்பாணம் : வெற்றியளிக்காத கடையடைப்பு
வடக்கு கிழக்கில் இன்றைய தினம் (18) கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வழமைபோன்று இயங்குகின்றன.
வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக தமிழரசுக் கட்சி இன்றையதினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் நிலைமை இவ்வாறு இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், வழமை போன்று போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் பொதுச் சந்தை, உணவகங்கள், என்பன திறக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
கடையடைப்பு வெற்றியளிக்கவில்லை
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை காணக் கூடியதாக உள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறித்து பலரும் தமது சமூக ஊடகங்களில் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கடையடைப்பு வெற்றி பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடையடைப்பை முன்னெடுப்பதற்கு யாழ் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




