எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்!
புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொருவர் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தளம் அனுராதபுரம் வீதியில் வசித்து வந்த நெய்னா மரிக்கார் நுஸ்ரத் ஜஹான் என்ற 36 வயதுடைய பெண்ணே சடலாமக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுக்கும் அரவரது இரண்டாவது கணவருக்கும் சில நாட்களாக சண்டை இடம்பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவும் இருவருக்குமிடையில் சண்டை இடம்பெற்றுள்ளதாக காவல்துறைியனரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனையடுத்து குறித்த பெண்ணின் இரண்டாவது கணவர் புத்தளம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் தடவியல் காவல்துறை பிரிவினர் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்தனர்.
இதன்போது குறித்த வீட்டில் இரத்தக்கறைகளும் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த பெண்ணை இரண்டாவது கணவர் கொலை செய்திருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
