இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை
இந்திய பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலாத் தலங்களின் இலங்கை ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
MakeMyTrip என்ற இணையத்தளம் இந்தியர்கள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலாத் தலங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, இந்திய பயணிகள் அதிகம் முன்பதிவு செய்த நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாமிடத்தில் உள்ளது.
தாய்லாந்து முதலிடம்
அத்துடன் குறித்த வரிசையில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டாமிடத்தில் உள்ளதுடன் இலங்கையைத் தொடர்ந்து வியட்நாம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த காலங்களை விட வியட்நாம் நோக்கிய பயண ஆர்வம் இந்தியர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
இலங்கை மற்றும் தாய்லாந்து தவிர, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிரித்தானியா (UK), அமெரிக்கா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளும் இந்தியர்களின் விருப்பமான இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முக்கிய சுற்றுலா மையங்களில் மேலதிக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |