பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Bangladesh
By Vanan
பங்களாதேஷிடமிருந்து நாணய பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலரை கடனாக பெற்றிருந்தது.
கடன் மீளளிப்பு
இவ்வருடம் ஓகஸ்ட் 17 ஆம் திகதி 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், செப்டம்பர் 02 ஆம் திகதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது.
எஞ்சிய கடன் தொகையான 50 மில்லியன் டொலரை இலங்கை கடந்த வியாழக்கிழமை (21) செலுத்தியதாக தெரிய வருகின்றது.
கடனுடன் தொடர்புடைய 4.5 மில்லியன் டொலர் வட்டித் தொகையையும் செலுத்தி நிறைவு செய்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்