இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை
Sri Lanka
Sri Lankan Peoples
Malaysia
By Dhilak
மலேசியாவில் இலங்கையைச் சேர்ந்த மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றிரவு(22) கோலாலம்பரில் Sentul கீழ் கோவில் கிராமத்தில் Perhentian வீதியில் உள்ள கடைவீதியில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை தேடும் நடவடிக்கையில் மலேசிய காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணை
அதேவேளை சந்தேக நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மலேசிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்