இலங்கையின் சனத்தொகையில் ஏற்படப்போகும் மாற்றம் : வெளியானது புதிய தகவல்!
Sri Lanka
Sri Lankan Peoples
Death
Digital Birth Certificate
By Kathirpriya
இலங்கையில் பிறப்பு மற்றும் இறப்பு வீதங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்சிகா கணேபொல தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதோடு இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சனத்தொகைப் பெருக்கம்
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்பு எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளது.
அதுமாத்திரமன்றி வருடாந்த இறப்பு எண்ணிக்கை 140,000 இலிருந்து 180,000 ஆக அதிகரித்துள்ளது." என்றார்.
இந்நிலைமை தொடரும் பட்சத்தில் அது நாட்டின் சனத்தொகைப் பெருக்கத்தை பாதிக்கும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்த்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்