சீனாவை காய்வெட்ட புதிய நகர்வு
சீனாவின் உதவி இல்லாமல் இலங்கையின் கடனை மறுசீரமைக்க இந்திய தரப்பும் மேற்குலகமும் புதிய நகர்வுகளை எடுக்கும் நிலையில், இந்த நகர்வுகள் உற்றுநோக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன.
இலங்கையில் ஏற்கனவே தனக்கு இருக்கும் ஆதிக்கத்திற்கு அப்பால், புதிய புதிய மையங்களை வளைத்துப் போட சீனா முயலும் நிலையில், இப்போது சீனாவின் ஆதரவின்றி இலங்கையின் கடனை மறுசீரமைககும் பேச்சுக்களை சிறிலங்காவும் அதன் முக்கிய கடன் வழங்குனர்கள் தரப்பும் ஆரம்பித்துள்ளமை பீஜிங்கிற்கு ஒரு செய்தியாக உள்ளது.
இன்னமும் நெருங்கிய தொடர்பு

இலங்கையின் கடனை மறுசீரமைத்துக் கொள்வதில் சீனா காட்டி வரும் தாமதம் காரணமாக விரக்தியுற்ற தரப்புகள் இப்போது இந்த நகர்வை எடுக்கத் துணிந்தாலும், சீனா இல்லாமல் எடுக்கப்படும் இந்த நகர்வுகளின் முன்னேற்றம் குறித்து ஒரு ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இலங்கையின் கடன் பிரச்சினைகளில் தன்னை புறம்தள்ளி இந்தியாவும் பரிஸ் கிளப் உள்ளிட்ட மேற்குலகமும், ஜப்பானும் எடுத்துவரும் முயற்சிகள் காரணமாக வேறுவழி இன்றி இந்த நகர்வில் சீனாவும் எதிர்வரும் நாட்களில் இணையக்கூடும்.
தன்னை காய்வெட்டி ஆரம்பிக்கப்படும் இந்த நகர்வுகள் குறித்து கருத்துரைத்த சீனா, இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் கூட்டாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறது.
தமது தரப்பு சிறிலங்காவுடன் இன்னமும் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும், அது கூறுகிறது.
கடன் மறுசீரமைப்பு முயற்சி

இந்த நிலையில், சீனாவின் உதவி இல்லாமல் இலங்கையின் கடனை மறு சீரமைக்க எடுக்கப்படும் முயற்சிகளை அடுத்து, இலங்கைக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை வழங்கிய தனியார் கடனாளிகள் குழுவும் தமது கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை சிறிலங்காவுக்கு அனுப்பி இருக்கின்றன.
ஆனால் எந்த தரப்பாயினும் சரி இலங்கையின் கடனை மறுசீரமைக்க எடுக்கும் முயற்சிகளில் இலங்கையின் நலனை விட அந்தந்த தரப்புகளுக்குரிய ஆதாயங்கள் மற்றும் நலன்களே அதிகமாக இருக்கின்றன.
இதில் இந்தியாவுக்கும் விதிவிலக்கில்லை - மேற்குலக நாடுகளுக்கும் விதிவிலக்கில்லை.
YOU MAY LIKE THIS