இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக வங்கி வெளியிட்ட தகவல்
இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவாக மீண்டு வந்தாலும், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் வறுமை மட்டத்திலும் அல்லது மீண்டும் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சுமார் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை மட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த விடயத்தினை உலக வங்கியின் (World Bank) இலங்கை பிரிவின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறை வருமானம்
உலக வங்கியால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் SRI LANKA DEVELOPMENT UPDATE அறிக்கையை வெளியிட்டு டேவிட் சிஸ்லன் இந்தக் கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை அடைந்துள்ளதாகவும், முன்னர் கணிக்கப்பட்ட 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்வதன் மூலம் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தொழில்துறை மற்றும் சேவைகளில், குறிப்பாக கட்டுமானம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைகளின் வலுவான செயல்திறன் காரணமாகியுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
