வீழ்ந்த நாட்டை இரண்டு வருடத்தில் மீட்பது அதிசயம்: முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் புகழாரம்!
கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும் என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், கிரீஸ், லெபனான் உள்ளிட்ட பிற நாடுகளைப் பார்க்கும் போது உலகில் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்ததில்லை என தெரிவித்துள்ளார்.
நியாயமான முடிவு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவு, அனுபவம் மற்றும் உலகளாவிய தொடர்புகளின் அடிப்படையில் நாட்டை மீட்டெடுக்கும் திறன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே (Ranil Wickremesinghe) இருந்தது என கூறிய அவர் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த தலைமையை தெரிவு செய்வது சரியான மற்றும் நியாயமான முடிவாகும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |