சீனாவுக்கு அதிர்ச்சியளித்துள்ள சிறிலங்கா
சீன சேதன பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நடத்தப்பட்ட சோதனையில் அந்த சேதனப் பசளையில் அபாயகரமான பக்ரீரியா உள்ளமை கண்டறியப்பட்டிருந்தது. எனவே அந்தப் பசளையின் மாதிரி மீளப் பரிசோதிக்கப்படமாட்டாதென அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் உள்ள பசளையை அதனை அனுப்பிய சீன நிறுவனம் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அதற்கான கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது.
கேள்விப் பத்திர நிபந்தனைகளுக்கு அமைய குறித்த பசளை தொகுதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பொறுப்பேற்று உரிய தரத்தைக் கொண்ட பசளையை மீண்டும் வழங்குமாயின் அது ஏற்றுக் கொள்ளப்படும் என விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சேதனப்பசளையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் கையளித்து பரிசோதிப்பதென முடிவெடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Sachindra Rajapaksa)தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.