2024 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: வெளியானது இலங்கை அணியின் பெயர் பட்டியல்
20 அணிகள் பங்கேற்கும் 2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை(Icc world cup 2024) தொடருக்கான அணியை சிறிலங்கா கிரிக்கெட்(SL Cricket) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2024 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பை தொடரானது, அமெரிக்கா (US) மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் (West Indies) ஜூன் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணியின் தலைவராக வனிந்து அசரங்க இடம்பெற்றுள்ளதுடன் பதில் தலைவராக சரித் அசலங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி
அதன்படி, ஐசிசி 2024 ஆடவர் ரி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி வீரர்கள் பின்வருமாறு...
வனிந்து அசரங்க, சரித் அசலங்க, குசல் மென்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மென்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெதிவ்ஸ், தசுன் சானக, தனஞ்ஜய டி சில்வா, மஹேஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, மதீஷ பதிரன, நுவன் துஷார, டில்ஷான் மதுசங்க
Here's your Sri Lankan squad ready to roar at the ICC #T20WorldCup 2024 in the USA and Caribbean! ??
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) May 9, 2024
READ: https://t.co/9Zia3yVeVZ #LankanLions pic.twitter.com/ZresMKrIqg
(Wanindu Hasaranga – Captain, Charith Asalanka – Vice Captain, Kusal Mendis, Pathum Nissanka, Kamindu Mendis, Sadeera Samarawickrama, Angelo Mathews, Dasun Shanaka, Dhananjaya De Silva, Maheesh Theekshana, Dunith Wellalage, Dushmantha Chameera, Nuwan Thushara, Matheesha Pathirana, Dilshan Madushanka)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |