காலம் கடந்தும் தீரா வலிகள் கூறும் கறுப்பு ஜூலையின் கதை (காணொளி)
கறுப்பு ஜூலை
ஈழத்தமிழரின் வரலாறு என்று சொல்லப்படுவது வலிகளாலும் வேதனைகளலும் பல ஆயிரக்கணக்காண அப்பாவித்தமிழர்களின் உயிர்ப்பறிப்புகளையும் கொண்டு அவர்கள் சிந்திய இரத்தத்தினால் எழுதப்பட்டதொன்றாகும்
அது வரலாற்று வழி நெடுகிலும் தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த நிலத்தின் ஒரு தேசிய இனம் என்பதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிறிலங்காவின் சிங்கள பௌத்த இனவாத்தால் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டதையும் இருப்புகள் அழிக்கப்பட்டதையும் அதன் பின் பல ஆண்டுகளின் பிற்பாடு தங்கள் தேசிய வீரர்களாக கொண்டாடிய நவீன துட்டகைமுனுக்களையும் நா வளைந்த படியெல்லாம் தூற்றி துரத்தி அடித்தமையும் கண்கூடு.
சிறிலங்காவின் தலைநகரில் தமிழர்கள் வாழ்ந்த தெருக்கள் தோறும் கொலைகள் செய்து கொன்று குவித்து தமிழரின் தடம் அழித்து தெருவெங்கிலும் ஊழியின் ஓலம் எழச்செய்து பரிநிர்வாண புத்தனை இரத்தங்களால் மடைபரவி கண்களை கொய்து படையலிட்ட நாளொன்றின் காலம் கடந்தும் தீரா வலிகளின் கதை கறுப்பு ஜூலை
வரலாற்று ஏடுகளில் ஆழப்பதிந்த கதை கறுப்பு ஜூலையின் கதை சொல்லும் காணொளி
வலிகளோடு வாழும் தமிழ் இனத்தின் வலிகளை வரலாற்றுக்கு கடத்தும் IBC தமிழ் வானொலி மாண்டு விட்ட மனித ஆன்மாக்களை நினைந்து அஞ்சலிக்கிறது.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 16 மணி நேரம் முன்