சாப்பாடு கேட்டு வீதியில் இறங்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது கோழைத்தனம்!

Sarath Fonseka Sri Lanka Sri Lankan Peoples SL Protest Sri Lanka Food Crisis
By Kalaimathy Oct 29, 2022 06:58 AM GMT
Report

இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை எனவும் சாப்பிட உணவு கேட்டு வீதியில் இறங்கும் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவின் நலன் அறிய நேற்று சென்றிருந்த போதே ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“வசந்த முதலிகே என்ற பல்கலைக்கழக மாணவன், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க அனுமதி பெற்று, இரண்டு மாதங்கள் தடுத்து வைத்துள்ளனர்.

வசந்த முதலிகேவுக்கு மோசமான தொழுநோய்

சாப்பாடு கேட்டு வீதியில் இறங்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது கோழைத்தனம்! | Sri Lanka Terrorism Sjb Mp Sarath Fonseka Media Sl

இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாட்டில் பயங்கரவாதம் இல்லை. நாட்டு மக்கள், சாப்பிடவும் குடிக்கவும் இல்லாத காரணத்தினால் குரல் எழுப்புகின்றனர்.

பயங்கரவாதத்தை உருவாக்கி, அப்படி குரல் கொடுக்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி தடுத்து வைத்திருப்பது, கோழைத்தனமான செயல் என்பதுடன் அடிப்படை உரிமை மீறலாக நாங்கள் பார்க்கின்றோம்.

வசந்த முதலிகே சுகவீனமாக இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். வசந்த முதலிகேவுக்கு மோசமான தொழுநோய் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்படும் வசதிகளின் குறைப்பாடுகள் காரணமாக இந்த நோய் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சிறிதம்ம தேரரும் கடுமையாக நோய்வாய்ப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவற்றுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். இளம் பிள்ளைகளை பிடித்துக்கொண்டு வந்து, இங்கு தடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு நோய்கள் தொற்றும். உயிருக்கும் ஆபத்து. இதனால், நான் அந்த நிலைப்பற்றி அறிய இங்கு வந்தேன்.

அனுமதி மறுப்பு

சாப்பாடு கேட்டு வீதியில் இறங்கும் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது கோழைத்தனம்! | Sri Lanka Terrorism Sjb Mp Sarath Fonseka Media Sl

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதிப்பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அசோக குணசேகர, சட்டத்திற்கு அமைய பார்வையிட அனுமதிக்க முடியாது எனக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எமக்குள்ள சிறப்புரிமைகளுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பார்வையிடும் உரிமையுள்ளது.

இதனால், அவர்களின் சட்டம் எம்மை தடுக்க முடியாது என தெளிவுப்படுத்தினேன். ஆனால், அவர் அதனை புரிந்துக்கொள்ளவில்லை. என்னுடன் இருந்த சட்டத்தரணிகளும் இதனை தெளிவுப்படுத்தினர், எனினும் அவர்கள் அதனை ஏற்க தயாராக இருக்கவில்லை.

எனக்கு வந்த முதலிகேவை பார்க்க அனுமதி வழங்கவில்லை. இந்த இடத்தில் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். ஒருவர் என்னுடன் பேசினார். பல்கலைக்கழக மாணவர் ஒருவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

மாணவனின் தந்தை படை வீரர். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர்களின் பிள்ளைகளுக்கு குரல் கொடுக்கவும் சுதந்திரமாக வாழவும் பாதுகாப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால், இது மிகவும் பயங்கரமான நிலைமை. அரச பயங்கரவாதம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இதற்கு எதிராக நாங்கள் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக நான் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026