அன்று மார் தட்டியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார்கள்- சிறீதரன் காட்டம்!
எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று பூநகரியில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டியவர்கள். இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்து இருக்கிறார்கள்.
இலங்கையில் மக்கள் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள். எரிவாயுவிற்காக வரிசையில் நிற்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது.
பொருளாதார நிலை அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. இப்படி இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறன.
எங்கள் இடங்களில் கொரோனாக் காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகளின் போது முளைத்த இராணுவ சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான மேலும் பல தகவல்களுடன் முக்கிய செய்திகளின் தொகுப்பு.
