வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா..!
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 01 முதல் 17 ஆம் திகதி வரை 100,750 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
இந்த காலகட்டத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் 20,597 வருகை தந்துள்ளனர். அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 14,156 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10, 281 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
அதிக சுற்றுலா பயணிகள்
ஜெர்மனி, சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கான அதிக சுற்றுலா பயணிகள் நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது. (151,496 வருகை), ஜூலை (143,039 வருகை) மற்றும் ஓகஸ்ட் (136,405 வருகை)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |