ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்...!
ஊடகங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
நாட்டின் மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களின் பணியைப் பாராட்டுவதற்காக நிகழ்வொன்று இன்று (29) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்காலிக அனுமதிப்பத்திரம்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் ஊடக அமைச்சினால் நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் தற்காலிக அனுமதிப்பத்திரமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |