இலங்கை மனித உரிமை நிலவரத்தை கண்டுகொள்ளப் போவதில்லை - ஐ.நாவில் ரஷ்யா பகிரங்கம்!
சிறிலங்கா தனது ஆணையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென துருக்கி தெரிவித்துள்ளது.
மேலும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இலங்கை ஜனநாயக ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளமைக்கு உகண்டா பாராட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடுகளை அடிப்படையாக கொண்ட பொறிமுறைகளை ஆதரிக்கவில்லை என பெலாரஸ் தெரிவித்துள்ளது.
ஐ.நா. சாசனத்தின் அடிப்படையை மீறும் செயற்பாடு
அத்துடன் அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுபவை என அந்த நாடு தெரிவித்துள்ளது.
அதேவேளை நாடுகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள் ஐ.நா சாசனத்தின் அடிப்படையை மீறுபவையென புரூண்டி தெரிவித்துள்ளது.
கடந்த தீர்மானம் குறிப்பிட்ட நாட்டின் ஆதரவுடன் நிறைவேற்றப்படாததால் அது பயனுள்ளதாக அமையவில்லை என சிம்பாப்வே தெரிவித்துள்ளது.
இலங்கையின் தேசிய முயற்சிகளை அங்கீகரிப்பதாக வியட்நாம்
மனித உரிமைகளிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள வியட்நாம் இழப்பீடு மற்றும் நிலங்கள் விடுவிப்பது குறித்த இலங்கையின் தேசிய முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில், இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை பெரிதுபடுத்தும் எண்ணமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தனது தளர்ச்சியற்ற ஆதரவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இலங்கை முன்னெடுத்துள்ள உள்நாட்டு முயற்சிகளை மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.