ஸ்ரீலங்காவின் மற்றுமொரு முகத்தைக் காண்பிக்கும் பௌத்த குருமாரின் சத்தியாக்கிரகப் போராட்டம்!
united nations
srianka
gnanasara thero
By Vasanth
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிராக பௌத்த பிக்குமாரை மையப்படுத்திய பொதுபலசேன உறுப்பினர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஞானசார தேரர் தலைமையில், கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. பொதுபலசேன உள்ளிட்ட பௌத்த அமைப்புகள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது மற்றும் இஸ்லாமிய மதரஸா பாடசாலைகள் சிலவற்றுக்குத் தடைவிதிப்பது உள்ளிட்ட பல விதப்புரைகள் அறிக்கையில் உள்ளன.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள கீழுள்ள காணொளியைத் தொடருங்கள்.