வவுனியாவில் தெலுங்கு மொழி சமூகத்தினரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டத்தில்!
அரசாங்தக்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த பேரணி கொரவப்பொத்தானை வழியூடாக சென்று கடைவீதியூடாக ஏ9 வீதியை அடைந்து பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்திருந்தது.
குறித்த பேரணியில் ஆசிரியர் தொழிற்சங்கம், மின்சார சபை தொழிற்சங்கம், தபால் ஊழியர் தொழிற்சங்கம், வங்கி ஊழியர் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றிருந்ததுடன் வவுனியா பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை வவுனியாவில் வாழும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினர் தமது தொழில் சார்ந்த பாம்புகள் மற்றும் குரங்குகளுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.