நெருங்கும் ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
செப்டெம்பர் 14ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாவிடின் அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் நாள் வரை வாக்காளர்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தபால் திணைக்களம் 10 மில்லியனுக்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்துள்ளதாகவும் ராஜித ரணசிங்க கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
எஞ்சியுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அடுத்த சில தினங்களில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும், எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் வாக்குச் சீட்டு விநியோகத்தை நிறைவு செய்ய தபால் திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாகவும் ராஜித்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 80 சதவீத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17.44 மில்லியன் என்று தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |