எப்படியிருந்தவர் இப்படியாகிவிட்டாரே - கோட்டாபயவுக்கு நிகழ்ந்த பரிதாபம்
முன்னாள் அதிபர் கோட்டாபய மற்றும் அவரது மனைவி ஆகியோர் அண்மையில் மியான்மாருக்கு சென்றனர்.
இந்நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு ஏற்றும் விமான வாசல் ஊடாகவே மியன்மார்க்கு சென்றுள்ளார் கோட்டாபய..
முன்னாள் அதிபர் என்று இருந்தாலும் இராஜ தந்திரிகள் செல்லும் வாசல் ஊடாக செல்லாமல் சரக்கு ஏற்றும் விமான வாசல் ஊடாக செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுள்ளார்.
போர் வீரராக இலங்கையின் இரண்டாம் துட்டகைமுனுவாக தன்னை உருவகப்படுத்திய கோட்டாபய ராஜபக்சவை சொந்த மக்களே துரத்தியடிக்கும் நிகழ்வையும் பரிதாபகரமாக வேறு நாடுகளுக்கு தப்பியோடும் நிகழ்வையும் காலம் கொண்டு வந்துவிட்டிருக்கின்றது.
ராஜபக்ச குடும்பம் , இலங்கை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் அத்தியாயம். கடந்த 20 ஆண்டுகளாக ராஜபக்ச சகோதரர்கள் இலங்கையில் அரசியலில் தமது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
2015 மகிந்த ராஜபக்ச, அதிபர் தேர்தலில் தோல்வியை கண்ட பின்னர் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் இக் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டது.
இருந்தபோதிலும் எதிர்ப்பாராத ஓர் மக்கள் ஆதரவை உருவாக்கி இலங்கையின் அரசியலில் மீண்டும் காலடியெடுத்து வைத்தனர்.
2019 ஆம் ஆண்டில், அதிபரான கோட்டாபய ஆரம்பத்தில் மக்கள் நாயகனாக திகழ்ந்தார், ஆனால் இரண்டே ஆண்டுகளில் அனைத்தும் தலைகீழாக மாறியது.
அரசியல் பிரவேசம் அசைக்க முடியாத வரலாறு என்றால் அவரின் பதவி பறிப்பும் இப்போது அவர் இருக்கும் நிலையும் கல்வெட்டுக்களில் பொறிக்கும் வரலாறாகிவிட்டது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
