இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் - இன்றைய வானிலை
Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை அறிக்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை

அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடை கன மழை பெய்யும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி