வெசாக் தினத்தன்று வட பகுதியில் விடுதலையான கைதிகள்!
Vavuniya
Gotabaya Rajapaksa
Sri Lanka
Department of Prisons Sri Lanka
By Kalaimathy
வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.
இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 244 சிறைகைதிகள் அரச தலைவர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மூன்று பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் அவர்களில் இருவர் வேறு குற்றச்சாட்டுக்களிலும் தண்டனை அனுபவித்து வந்தநிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்