இஸ்ரேல் உடனான இலங்கையின் உறவு: துண்டிக்குமாறு கோரும் எம்.பி!
இஸ்ரேல் (Israel) உடனான இருதரப்பு உறவுகளை மீளப்பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.
காசா (Gaza) மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்
இன்றைய (14) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே, ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.
உலக சமாதானம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துமாறு கோர வேண்டிய நேரம் இது. உலகில் சமாதானத்தை விரும்பும் அனைத்து தரப்பினரும் இதனையே கோருகின்றனர்.
அத்துடன், எந்தவொரு ஆபத்துமின்றி பயணக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தரப்பினர் விடுதலை செய்யப்பட வேண்டும்.
பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வது தொடர்பான கத்தார் (Qatar) மற்றும் எகிப்தின் (Egypt) முன்மொழிவை ஹமாஸ் இயக்கம் அண்மையில் ஏற்றுக் கொண்டிருந்தது.
இருதரப்பு உறவுகள்
இதனை இஸ்ரேல் எதிர்ப்பார்க்கவில்லை. தற்போதைய இஸ்ரேல் அரசாங்கத்துக்கு பணயக்கைதிகளை விடுவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை.
காசாவில் உள்ள அனைவரையும் அழிப்பதை இஸ்ரேல் நோக்கமாக கொண்டுள்ளது. இது இனவழிப்பாகும்.
இந்த நிலையில், உலகில் உள்ள சில நாடுகள் இஸ்ரேலுடன் இருதரப்பு உறவுகளை கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
அமெரிக்காவுக்கு அடிமையாகியுள்ள இலங்கை
நாம் தற்போது ஒரு நிலையான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளோம். இஸ்ரேல் மற்றும் ஈரானை சமப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
Universities are now rising up against what is happening in the occupied #Palestinian territory. You go & bring President #Putin before the ICC, but what about #Netanyahu? What is this double standard? Where is our #President on this? - MP Rauff Hakeem #SriLanka #Parliament… pic.twitter.com/gw3HNJpf7R
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) May 14, 2024
ஈரான் அதிபரின் இலங்கைக்கான பயணமும் இரண்டு நாடுகளையும் சமமாக கவனிக்க முடிந்தமை குறித்து பெறுமை கொள்வதிலும் எந்தவொரு அர்த்தமும் இல்லை.
இந்த விடயம் தொடர்பில் நாம் வெட்கப்பட வேண்டும். இலங்கை தற்போது அமெரிக்காவுக்கு (America) அடிமையாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |