முதலாவது ரி 20 : தட்டுத்தடுமாறி வென்றது இலங்கை அணி
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி 20 போட்டியில் இலங்கை அணி தட்டுத்தடுமாறி வென்றது.
புதிய அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தலைமையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தப்போட்டி நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சிக்கந்தர் ராசா 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் மகீஷ் தீக்சன, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக, எஞ்சலோ மெத்யூஸ் 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில், சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக மெத்யூஸ் தெரிவிானார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |