இருளில் மூழ்கவுள்ள நாடு - சடுதியாக அதிகரித்த விலை!
உலக சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்த சில நாடுகள் மீண்டும் நிலக்கரிக்கு மாறியதன் மூலம் அதற்கான தேவை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக உலக சந்தையில் நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை இவ்வருடம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள நிலக்கரி, 33 கப்பல்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு வரும் நிலக்கரி கப்பல்
எவ்வாறாயினும், உலக சந்தையில் அதீதமாக அதிகரித்துள்ள நிலக்கரியின் விலை எதிர்காலத்தில் படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர மேலும் தெரிவித்தார்.
மேலும் பல விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்துகொள்ளுங்கள்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
