முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் !
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines) அறிவித்துள்ளது.
சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
விமான சேவைகள் இரத்து
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து (Katunayake Airport)நேற்று (17) மாலை 6 .25 மணிக்கு துபாய்க்கு புறப்படவிருந்த மற்றும் அங்கிருந்து இலங்கைக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளை இரத்துச் செய்துள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கனமழையால் பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டதுடன் எண்ணற்ற விமானங்கள் காலதாமதமாகவும் ரத்து செய்யப்பட்டும் இருந்ததால் விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |