சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்
SriLankan Airlines
Sri Lanka Airport
Sri Lanka Cabinet
By Aadhithya
இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் (Sri Lankan Airlines) உரிமையை கைமாற்றும் வகையில் இதுவரைக் காலமும் செயற்பாட்டிலிருந்த விலைமனுக்கோரல் செயற்பாடுகளை கைவிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் ஒன்றிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று வழிமுறை
அந்தவகையில், கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விலைமனுக்கோரல் செயற்பாடுகளுக்கு பதிலாக மாற்று வழிமுறையொன்றை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்