சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்
கடனில் உள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமான சேவை நிறுவனத்திற்கு பொருத்தமான முதலீட்டாளர்கள் இன்னும் வரவில்லை எனதகவல்கள் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வர்த்தக காரணங்களுக்காக சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மதிப்பீட்டை திரும்பப் பெறத் தெரிவு செய்துள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலர்கள்
எனவே இனி தேசிய விமான நிறுவனத்திற்கு மதிப்பீடுகள் அல்லது பகுப்பாய்வுக்களை வழங்கப் போவதில்லை என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 7 சதவீத பாதுகாப்பற்ற பத்திரங்களுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்த 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதான மதிப்பீட்டையும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் திரும்பப் பெற்றுள்ளது.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பத்திரங்களின் அசல் மற்றும் வட்டியை 25 ஜூன் 2024 இல் செலுத்தவில்லை, அத்துடன் தற்போது 30 நாள் சலுகைக் காலத்திற்குள் உள்ளது.
சிறிலங்கன் விமான சேவையில், உலகளாவிய ஆர்வம் குறைவாக இருந்ததால், அரசாங்கம் விமானத்தை நிறுவனத்தை முழுமையாக விற்பனை திட்டத்துக்கு பதிலாக, அதனை மறுசீரமைக்க முயற்சிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |