புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று முதல் நடைமுறையில்
சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த சட்டமூலம் கடந்த ஜூலை 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, புதிய சட்டம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
விரிவான விசாரணை
இந்த சட்டமூலமானது, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊழல் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடும் தரப்பினர் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்றையும் இந்த சட்டத்தின் மூலம் அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
