தனியார் குத்தகைக்கு எடுத்த குளத்தில்! அத்துமீறி மீன்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவம்

Army Mannar SriLanka
By Chanakyan Jun 01, 2021 09:15 AM GMT
Report

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குளம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குளத்தில் தொடர்ச்சியாக இராணுவம் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று திங்கட்கிழமை மதியம் குறித்த பகுதிக்குச் சென்று நேரடியாக குறித்த சம்பவத்தை அவதானித்தார்.

திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குறித்த குளத்தை கமக்கார அமைப்பு கமநல கேந்திர நிலையத்துடன் இணைந்து திருக்கேதீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மீன் பிடிப்பதற்கு மூன்று மாத கால குத்தகை அடிப்படையில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்று மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.

எனினும் இராணுவத்தினர் எவ்வித அனுமதியும் இன்றி இரவு பகல் பாராது குறித்த குளத்தில் தொடர்ச்சியாக மீன் பிடித்து வந்துள்ளனர்.

இதனால் குத்தகைக்கு குறித்த குளத்தை பெற்ற நபர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் உரிய அமைப்பினர் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் திருக்கேதீஸ்வர கமக்கார அமைப்பு மற்றும் பாதீக்கப்பட்ட நபர் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று திங்கட்கிழமை மதியம் குறித்த பகுதிக்கு திடீர் விஜயம் செய்து பார்வையிட்டார். இதன் போது இராணுவத்தினர் சிவில் உடையில் மீன் பிடித்துக் கொண்டு இருப்பதை நேரடியாக அவதானித்தார்.

இவ்விடயம் தொடர்பாக இராணுவ உயர் அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினார். இதன் போது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக இராணுவ அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

உரிய தீர்வு கிடைக்காது விட்டால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராணுவ அதிகாரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தனியார் குத்தகைக்கு எடுத்த குளத்தில்! அத்துமீறி மீன்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவம் | Sri Lankan Army Fishing Illegally


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025