வெளிநாடொன்றிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Sri Lanka
By Sumithiran
வெளிநாடொன்றிலிருந்து வந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து வந்த குறித்த நபரின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த போதைப்பொருள் பணியக காவல்துறையினர் அவரை சோதனையிட்டுள்ளனர்.இதன்போது அவர் கொண்டு வந்த பொதியிலிருந்து 2.1 மில்லியன் பெறுமதியான 21,400 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடை

இவ்வாறு அவர் கொண்டுவந்த சிகரெட்டுகள் இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்விற்கு தடைசெய்யப்பட்டவையாகும்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் டுபாயில் உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.