ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர்கள் படைத்த சாதனை

Sri Lanka South Korea Sports
By Shadhu Shanker Jun 16, 2024 11:26 AM GMT
Report

தென்கொரி­யாவில்(South Korea) நடை­பெற்ற 'ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப்' ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க தங்­கப்­ப­தக்கம் வென்றுள்ளார்.

இப்­போட்­டியில் மற்­றொரு இலங்கை(Sri Lanka) வீரர் சுமேத ரண­சிங்க வெண்­க­லப்­ப­தக்கம் வென்­ற­துடன், பெண்­க­ளுக்­­கான ஈட்டி எறி­தலில் நதீஷா தில்­ஹானி வெண்­க­லப்­ ப­தக்கம் வென்றுள்ளார்.

தென்கொரி­யாவின் மெக்போ நகரில் நடை­பெற்ற 2ஆவது ஆசிய எறிதல் சம்­பி­யன்­ஷிப்பில் நேற்று (15) நடை­பெற்றது.

நம்பிக்கை அழிந்தது : நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை வீரர்

நம்பிக்கை அழிந்தது : நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை வீரர்

 புதிய போட்டிச் சாதனை

ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் ருமேஷ் தரங்க பத்­தி­ரகே 85.45 மீற்றர் தூரம் எறிந்து தங்­கப்­ப­தக்கம் வென்றுள்ளார்.இதன் மூலம் புதிய இலங்கைச் சாத­னை­யையும், புதிய போட்டிச் சாதனை­யையும் ருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர்கள் படைத்த சாதனை | Sri Lankan Athletes Record In Javelin Throwing

இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டில் திய­க­மவில் நடை­பெற்ற போட்­டி­யொன்றில் சுமேத ரணசிங்க 83.04 மீற்றர் எறிந்­த­மையே இது­வரை ஈட்டி எறி­தலில் இலங்கையின் தேசிய சாத­னை­யாக இருந்­தது, அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டிக்கு நேரடி தகுதி பெறு­வ­தற்­கான அடைவு மட்டம் 85.50 மீற்­றர்­க­ளாகும். எனவே, ஒலிம்பிக் அடைவு மட்­டத்தை 5 சென்­ரி­மீற்­ற­ரினால் ருமேஷ் தரங்க அடையத் தவறியுள்ளார்.

மீண்டும் ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

மீண்டும் ஐசிசி விருதினை வென்று வரலாறு படைத்த இலங்கை வீராங்கனை

இலங்கையின் சாதனை

இதேவேளை,அதே­வேளை, முந்­தைய இலங்­கைச் சாத­னை­யா­ள­ரான சுமேத ரண­சிங்­கவும் நேற்று ஆசிய எறிதல் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் பங்­கு­பற்றி வெண்­கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர்கள் படைத்த சாதனை | Sri Lankan Athletes Record In Javelin Throwing

33 வய­தான சுமேத ரண­சிங்க இப்­போட்­டியில் 77.57 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்தார். பாகிஸ்­தானின் எம். யசீர் 78.10 மீற்றர் எறிந்து வெள்­ளிப்­பதக்கம் வென்றுள்ளார்.

இதே­வேளை, பெண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் இலங்கை வீராங்­கனை நதீஷா தில்­ஹானி லேக்­கம்கே, 57.94 மீற்றர் எறிந்து வெண்­கலப் பதக்­கத்தை வென்றுள்ளார்.

மற்­றொரு இலங்கை வீராங்­கனை டயனா ஹர்­சனி 48.46 மீற்றர் எறிந்து 7ஆவது இடத்தைப் வென்றுள்ளார். இப்­போட்­டியில் ஜப்­பா­னிய வீராங்­கனை மோமனி உவேதா 61.32 மீற்றர் எறிந்து தங்கப் பதக்கத்தையும் சீனாவின் சூ லிங்டான் 60.06 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி

2024 ரி20 உலகக் கிண்ணப் போட்டி: வெளியேற்றப்பட்டுள்ள இலங்கை அணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026