ஐசிசி தரவரிசை : பந்து வீச்சில் முன்னேறிய இலங்கை வீரர்
Sri Lanka Cricket
International Cricket Council
By Sumithiran
ஐ.சி.சி(icc) ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் (sri lanka cricket team)சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சன(Maheesh Theekshana) மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
7வது இடத்திலிருந்த தீக்சன 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன், ஐ.சி.சி தரவரிசையில் தீக்ச அடைந்த மிக உயர்ந்த நிலை இதுவாகும்.
தரவரிசையில் முன்னேற்றம்
நியூசிலாந்துக்கு (new zealand)எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இவ்வாறு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் ஆப்கானிஸ்தானின்(Afghanistan) ரஷீத் கான்(Rashid Khan) முதலிடத்திலும், இந்தியாவின்(india) குல்தீப் யாதவ்(Kuldeep Yadav) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |