சிறிலங்காவின் காவிக்கிளர்ச்சி 2.0 ஆரவார பின்னணி என்ன.!
சூரியனே அஸ்தமிக்காத ராஜ்யம் என ஒருகாலத்தில் பெருமை விளிப்பின் மையமாக இருந்த பிரித்தானிய முடியாட்சியின் பக்கிங்காம் அரண்மனையாக இருக்கலாம் அல்லது சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரச தலைகள் குடியிருக்கு ஜனாதிபதி மந்தரய போன்ற மாளிகையாக இருக்கலாம் ஆனால் அவற்றில் குடிகொண்ட சதிகள் அல்லது குற்றங்களுக்கு என்றோ ஒரு பதில் கூறவேண்டித்தான் வரும்.
இந்த நியதிக்குரிய குறியீட்டைத்தான் தான் நேற்று பிரித்தானியாவின் பக்கிங்காம் அரண்மனையின் முக்கிய வாரிசுகளில் ஒருவரான முன்னாள் இளவரசரும் இன்னாள் மவுண்பேட்டன் வின்சருமான அன்ரு காவற்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அல்லது சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் கடந்த வருடம் கைதாகியது போன்ற சம்பவங்கள் உணர்த்தக்கூடும்.
சிறிலங்காவின் ஜனாதிபதி நேற்று இந்திய தலைநகரில் வைத்து பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உட்பட்ட தலைகளுடன் கலந்துரையாடி புதிய ஆதாயங்களுக்கு அச்சாரம் போட கொழும்பில்; அமெரிக்காவின் பசுபிக் கட்டளை படைய முகம் சில புதிய டீல்களுக்குரிய அச்சாரத்தை போட்டுள்ளது.
இதேபோல உள்ளுரில் சிங்கள பௌத்த மக்களுக்குரிய ஒரு 2.0 உசுப்பேற்றலை செய்யும் வகையில் மகா சங்க மாநாடு இன்றும் நடந்தது.
தமிழர்களிதரப்பில் இருந்து எழும் பௌத்த எதிர்ப்புக்கு எதிராகச் செயற்படும் சூளுரைகளும் தையிட்டி விகாரைக்காக பிடிக்கப்பட்ட காணியில் ஒரு துண்டைக்கூட மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்ற சூளுரைகளும் எழுந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட நாட்டின் எந்தப் பகுதியிலும் பௌத்தர்களுக்கு தமது மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு உரித்து உண்டு இதில் தமிழ்பகுதிகளுக்கு விலக்கு இல்லையென்ற குரல்கள் எழுந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |