தமிழகத்தில் தலைமறைவாகியிருந்த இலங்கை தம்பதி சிக்கியது
arrested
tamilnadu
srilankan couple
By Jaso
படகு மூலம் தமிழகத்திற்கு சென்று அங்கு தலைமறைவாகியிருந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழகம் - தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே அவர்கள் பிடிக்கப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதியை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்த பலருடன் படகு மூலம் கடந்த பெப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு பயணித்திருந்ததுடன், அவர்களுடன் சென்றவர்கள் அங்கிருந்து கனடா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், மதுரையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், அவர்கள் இருவரிடமும் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.