எரிபொருட்களின் விலையை திருத்தியது ஐஓசி
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Vanan
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தங்கள் செய்திருந்த நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த விலை திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலையை 6 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
அத்துடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும் குறைக்கப்பட்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதே அளவிலான விலை திருத்தத்தை தாமும் மேற்கொள்வதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.