இலங்கையிலுள்ள சீனர்களின் கபடநாடகம் அம்பலம்
இலங்கையில் திட்டங்களை செயற்படுத்துவதற்காக வந்துள்ள சீனப் பிரஜைகள் இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்த காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பத்து இலங்கைச் சிறுமிகள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அழகான இளம் பெண்களைத் தேர்வு செய்து திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு விடுதிகளில் பணியமர்த்துவது தெரியவந்துள்ளது.
ஹொரணையை சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்ல தயாராகும் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போதே இது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்பும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.