பங்களாதேஷ் வழங்கிய கடனை மீள செலுத்திய இலங்கை!
பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர்கள் கடனில் ஒரு பகுதியாக $50 மில்லியன் டொலர்களை மீள செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் வங்கி ஓகஸ்ட் 17 அன்று செலுத்துதலின் முதல் தவணையைப் பெற்றது என்று மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநரும் செய்தித் தொடர்பாளருமான Md Mezbaul Haque தெரிவித்துள்ளார்.
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் மற்றொரு தவணை செலுத்தும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று தவணைகள்

எவ்வாறாயினும், இரண்டாவது தவணையாக இலங்கை எவ்வளவு செலுத்தும் என ஹக் தெரிவிக்கவில்லை. இந்த ஆண்டு செப்டம்பருக்குள் 200 மில்லியன் டொலர் தொகையை நாடு செலுத்திவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், பங்களாதேஷ் நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளில் இலங்கைக்கு பணத்தை கடனாக வழங்கியது.
முதல் தவணை $50 மில்லியன் ஆகஸ்ட் 19 அன்று அனுப்பப்பட்டது, இரண்டாவது தவணை $100 மில்லியன் ஓகஸ்ட் 30 அன்று மற்றும் மீதமுள்ள $50 மில்லியன் செப்டம்பர் 2021 இல் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.