இலங்கையில் இன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களின் விபரம் வெளியானது!
corona
sri lanka
people
australia
By Shalini
இலங்கையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,637 பேராக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 210,516 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 178,259 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்