அபாய கட்டத்தை எட்டியது இலங்கை
மருந்து தட்டுப்பாடு
இலங்கை மருந்து தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகளுக்கும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் சில மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்தார்.
இன்ஃப்ளுவென்ஸா வைரஸ்
இதேவேளை, இலங்கையில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் இன்ஃப்ளுவென்ஸா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக சிறுவர் நோயியல் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.
இலங்கையில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃப்ளுவென்ஸா வைரஸால் பாதிக்கப்படலாம் என்று தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தலைவலி, சளி, மூக்கில் நீர்வடிதல், இருமல் மற்றும் பசியின்மை, ஆகியன இதன் அறிகுறிகள் என அவர் சுட்டிக்காட்டினார்.